நாம் கடவுளைத் தொழுவோம்.
கடவுள் ஆவியாயிருக்கிறார். அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும். தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும் படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4:24.
நம்முடைய பிதாவாகிய கடவுளாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோமர் 1:7
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள். இதிலே களிகூர்ந்து மகிழக் கடவோம். சங்கீதம் 118:24
ஆண்டவரே எங்கள் உதடுகளைத் திறந்தருளும்.
அப்பொழுது எங்கள் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்
திரியேகக் கடவுளைப் போற்றுதல்
சேனைகளின் கடவுளாகிய கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்திருக்கின்றன. உன்னதத்திலே ஓசன்னா.
கர்த்தரின் நாமத்தினாலே வந்தவரும் வருகிறவருமானவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உன்னதத்திலே ஓசன்னா.
கடவுளே நீர் பரிசுத்தர்.
கடவுளே நீர் பரிசுத்தர்.
சர்வ வல்லவரே நீர் பரிசுத்தர்
சர்வ வல்லவரே நீர் பரிசுத்தர்.
சாவாமையுடையவரே நீர் பரிசுத்தர்
சாவாமையுடையவரே நீர் பரிசுத்தர்
ஆண்டவரே எங்களுக்காகச் சிலுவையில் அறையுண்ட எங்கள் மீட்பரே எங்கள்மேல் கிருபையாயிரும்
ஆண்டவரே எங்களுக்காகச் சிலுவையில் அறையுண்ட எங்கள் மீட்பரே எங்கள்மேல் கிருபையாயிரும்